இலங்கை சென்ற ஜேர்மன் பிரஜைகளுக்கு சிறுவர்கள் செய்த காரியம்..!!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை சென்ற ஜேர்மன் பிரஜைகளுக்கு சிறுவர்கள் செய்த காரியம்..!!

இலங்கைக்கு சென்ற ஜேர்மனியை பிரஜை இருவரிடம், தங்களுடைய கைவரிசையைக் காண்பித்த, சிறுவர்கள் இருவர், கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
 
அந்தச் சிறுவர்கள் இருவரிடமிருந்தும் பெறுமதியான ​பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளனவெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்தச் சம்பவம்,  மட்டக்களப்பு, முகத்துவாரம் சவுக்கடி கடற்கரை பிரதேசத்திலேயே நேற்று இடம்பெற்றுள்ளது.
 
அந்தச் சிறுவர்களிடமிருந்து, சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் இரண்டு, 3 ஆயிரத்து 745 ரூபாய், மூக்குக்கண்ணாடி, கைப்பை என்பனவே மீட்கப்பட்டுள்ளன.
 
உயர்கல்வி பயின்றுவரும், ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இருவர், விடுமுறையைக் கழிப்பதற்காக, மட்டக்களப்புக்கு சென்றுள்ளனர்.
 
முகத்துவாரம் சவுக்கடி கடற்கரையில் நேற்று முன்தினம்  இருந்தபோதே, இவை திருடப்பட்டிருந்தன.
 
இதனையடுத்து, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம்.டி. தீகவத்துருவவின் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு சிறுவர்கள் இருவரையும் கைதுசெய்தனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மூலக்கதை