வெடிகுண்டு கடத்திய புகாரில் சிறை சென்று மீண்டு வந்த கிரிக்கெட் வீரர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெடிகுண்டு கடத்திய புகாரில் சிறை சென்று மீண்டு வந்த கிரிக்கெட் வீரர்

கேப் டவுன்: தென்னாப்பிரிக்க நாட்டு  கிரிக்கெட் வீரர் அல்பி மார்கல், ஐபிஎல் போட்டிகள் ஆடியவர். சென்னை  சிஎஸ்கே அணிக்காக முதல் ஐபிஎல்-ல் ஆடினார்.

அதன் பின் மற்ற அணிகளிலும், தென்னாப்பிரிக்க அணியிலும் கிரிக்கெட் ஆடி இருக்கிறார். இவரது சகோதரர் மோர்னே மார்கல், தென்னாப்பிரிக்கா அணியின் முன்னணி பந்துவீச்சாளர்.

தென்னாப்பிரிக்கா காட்டில் வேட்டையாடுவது மார்கலுக்கு  பிடித்தமான பொழுதுபோக்கு.   சமீபத்தில்  காட்டுக்கு  வேட்டையாட சென்றவர்  மீதமுள்ள வெடிகுண்டுகளை காரில் பின்பகுதியில் வைத்து விட்டு காரை அவரது  தோட்டக்காரரிடம், சுத்தம் செய்யச் சொல்லி விட்டு சென்றுள்ளார். காரின் பின்னால் இருந்த சில வெடி குண்டுகளை என்ன செய்வது என தெரியாமல், அல்பி மார்கலின் பையில் போட்டு வைத்துள்ளார் தோட்டக்காரர்.


மார்கல் சில நாட்கள் கழித்து பொழுதுபோக்காக மொசாம்பிக் நாட்டிற்கு மீன் பிடிக்க சென்ற போது  ஏர்போர்ட்டில்  அவரது பையை சோதனை செய்தனர்.

அப்போது  அதில் வெடிகுண்டுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மொழி பிரச்சனையால் எந்த உதவியும் கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவரது  நண்பர்கள்  மூலம்  வக்கீல் ஏற்பாடு செய்து நடந்த விஷயத்தை தெளிவுபடுத்தி சிறையிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

விளையாட்டு வீரரோ அல்லது ேவறு யாராக இருந்தாலும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் முன்பு உங்களது  பைகளை நன்றாக சோதனை  செய்த பிறகு விமான பயணம் மேற்கொள்ளுங்கள். இல்லையென்றால் என்னைப்  போல சிறையில்  சிக்கி அவதிப்பட வேண்டிய சூழல் உண்டாகும் எனக் கூறியுள்ளார்.


.

மூலக்கதை