சிங்கப்பூரில் நடந்த கிராண்ட் பிரீ கார் பந்தயத்தில் பிரிட்டன் வீரர் ஹாமில்டன் சாம்பியன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிங்கப்பூரில் நடந்த கிராண்ட் பிரீ கார் பந்தயத்தில் பிரிட்டன் வீரர் ஹாமில்டன் சாம்பியன்

புலாவு உஜ்ஜாங்: சிங்கப்பூரில்  நடந்து வந்த  கிராண்ட் பிரீ கார் பந்தயத்தில் பிரிட்டன் வீரர் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 20 முன்னணி வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், வீரர்கள் ஒருவரையொருவர் முந்திச் சென்ற காட்சி மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது.

மெர்சிடஸ் அணியில் இடம்பெற்ற பிரிட்டன் வீரர் ஒரு மணி 51 நிமிடம் 11 வினாடிகளில் இலக்கை எட்டி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இந்த சீசனில் ஹாமில்டன் 7வது வெற்றியைப் பெற்றுள்ளார்.

இப்போட்டியில் நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டாப்பன் இரண்டாவது இடத்தையும், செபஸ்டியன் வெட்டல் 3வது இடத்தையும் பிடித்தனர்.

இந்த கார் பந்தயத்தை காண இதுவரை சுமார் 3,50,000 வெளிநாட்டு பார்வையாளர்கள் வந்துள்ளனர்.   இதனால் சுற்றுலாத்துறை ஆண்டுக்கு சுமார் 150 மில்லியன் டாலர் ஈட்டியுள்ளது. இந்த கார் பந்தயம் நடத்துவதற்கு ஆண்டுக்கு சுமார் 150 மில்லியன் டாலர் செலவாகிறது.

இதற்கான செலவில் 60 விழுக்காட்டுப் பணத்தை சிங்கப்பூர் அரசு வழங்குகிறது. மீதி 40 விழுக்காட்டுப் பணத்தை சிங்கப்பூர் கிராண்ட் பிரீ பந்தய ஏற்பாட்டாளர்கள் செல விடுகின்றனர்.


.

மூலக்கதை