பரிசில் மகிழுந்து இல்லா நாள்! - வெற்றி அளித்ததா??!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிசில் மகிழுந்து இல்லா நாள்!  வெற்றி அளித்ததா??!!

தொடர்ச்சியான நான்காவது வருடமாக பரிசில் 'மகிழுந்து இல்லா நாள்' நேற்று ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. பரிசுக்குள் நுழையும் அனைத்து வழிகளையும் தடுத்து தனியே பாதசாரிகளுக்கும் துவிச்சக்கரவண்டிகளுக்கும் அனுமதிக்கப்பட்ட இந்த நாள் வெற்றி அளித்ததா?
 
சுற்றுச்சூழல் மாசடைவு, வளிமண்டலத்தில் கலந்துள்ள தூசுகளை தடுக்கும் அல்லது குறைக்கும் வண்ணம் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டது. நாள் முடிவில் காற்றில் கலந்திருந்த  நைட்ரோஜன் டை ஒக்சைட் (Nitrogen dioxide) (NO2) 28 இல் இருந்து 30 வீதம் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பல்லாயிரக்கணக்கானவர்கள் எவ்வித வாகன இடையூறுகளும் இன்றி பரிசை சுற்றி வந்தனர். அமெரிக்க சுற்றுலாப்பயணி ஒருவர் தெரிவிக்கும் போது, 'இன்று வீதிகள் மூடப்படுவதாக தெரிவித்தனர். ஆனால் அது இத்தனை இனிமையானதாக இருக்கும் என நான் நம்பவில்லை!' என தெரிவித்தார். 
 
பரிசுக்குள் மிக அவசியமான வானங்களுக்கு மாத்திரமே அனுமதி வங்கப்பட்டது. அவையும் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் பயணிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டிருந்தது அதேவேளை 2017 ஆம் ஆண்டில் பரிசுக்குள் போக்குவரத்து நெருக்கடி 6 வீதத்தால் குறைந்தும், 2018 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் மாசடைவு கணிசமாக குறைந்தும் உள்ளன என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ குறிப்பிட்டிருந்தார்.

மூலக்கதை