அமெரிக்காவில் தீ விபத்து: எரிவாயு குழாய் வெடித்தது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

அமெரிக்காவின் பாஸ்டன்  நகரில்  ஏற்பட்ட  எரிவாயு  குழாய் வெடிப்பில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.  "அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் கொலம்பியாவுக்கு சொந்தமான எரிவாயு நிறுவனத்தில் எரிவாயு குழாய்கள் வெடித்து விபத்துக்குள்ளானது.  இதில் அருகிலிருந்த கட்டிடங்களில் தீப்பிடித்தது. இதில் ஒருவர் பலியானார். பலர் காயம் அடைந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தொடர் முயற்சி காரணமாக தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதிகளில் எரிவாயுக் கதிர்வீச்சு காற்றில் கலந்துள்ளதால் அப்பகுதிகள் சுவாச கோளாறு குறித்து புகார்கள் தொடர்ந்து தெரிவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த எரிவாயு விபத்து காரணமாக மாசசூசெட்ஸ் கவர்னர் சார்லி பேக்கர் அவசர கால நிலையை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ”எரிவாயு தீ விபத்து ஏற்பட்ட இடங்களில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. சுமார் 8,000 மக்கள் வேறு இடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளனர்." என்றார். அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தாக இது கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பாஸ்டன்  நகரில்  ஏற்பட்ட  எரிவாயு  குழாய் வெடிப்பில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.

 "அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் கொலம்பியாவுக்கு சொந்தமான எரிவாயு நிறுவனத்தில் எரிவாயு குழாய்கள் வெடித்து விபத்துக்குள்ளானது.

 இதில் அருகிலிருந்த கட்டிடங்களில் தீப்பிடித்தது. இதில் ஒருவர் பலியானார். பலர் காயம் அடைந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தொடர் முயற்சி காரணமாக தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

தொடர்ந்து அப்பகுதிகளில் எரிவாயுக் கதிர்வீச்சு காற்றில் கலந்துள்ளதால் அப்பகுதிகள் சுவாச கோளாறு குறித்து புகார்கள் தொடர்ந்து தெரிவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த எரிவாயு விபத்து காரணமாக மாசசூசெட்ஸ் கவர்னர் சார்லி பேக்கர் அவசர கால நிலையை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ”எரிவாயு தீ விபத்து ஏற்பட்ட இடங்களில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. சுமார் 8,000 மக்கள் வேறு இடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளனர்." என்றார்.

அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தாக இது கூறப்படுகிறது.

மூலக்கதை