தனியார் மருத்துவமனையின் கவனக்குறைவால் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ 58 லட்சம் நஷ்ட ஈடு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 

தனியார் மருத்துவமனையின் கவனக்குறைவால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.58 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு, மூல நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமடைந்து வந்தவர் அபானி குமார் பதி (வயது 29). அவர்  திடீரென தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு அவர் எடுத்திருந்த மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சத்தை மருத்துவமனைக் கட்டணமாக வாங்கிக் கொண்டது. அனைத்துக் கட்டணமும் செலுத்தப்பட்ட பிறகே அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவமனை கூறியது. இதை எதிர்த்து அவரது பெற்றோர் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொட.ர்ந்தனர்.  பதியின் மரணத்திற்கு தங்களின் அலட்சியம் காரணம்.அல்ல என மருத்துவமனை நிரூபிக்கத் தவறி விட்டது. எனவே உயிரிழந்த பதியின் குடும்பத்திற்கு ரூ. 57.65 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.

தனியார் மருத்துவமனையின் கவனக்குறைவால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.58 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2003ம் ஆண்டு, மூல நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமடைந்து வந்தவர் அபானி குமார் பதி (வயது 29).

அவர்  திடீரென தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு அவர் எடுத்திருந்த மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சத்தை மருத்துவமனைக் கட்டணமாக வாங்கிக் கொண்டது. அனைத்துக் கட்டணமும் செலுத்தப்பட்ட பிறகே அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவமனை கூறியது.

இதை எதிர்த்து அவரது பெற்றோர் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொட.ர்ந்தனர்.

பதியின் மரணத்திற்கு தங்களின் அலட்சியம் காரணம்.அல்ல என மருத்துவமனை நிரூபிக்கத் தவறி விட்டது. எனவே உயிரிழந்த பதியின் குடும்பத்திற்கு ரூ. 57.65 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.

மூலக்கதை