பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான அறிக்கை: கவர்னர் மாளிகை மறுப்பு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான அறிக்கையை  உள்துறை அமைச்சகத்துக்கு  அனுப்பவில்லை: என கவர்னர் மாளிகை திட்டவட்டமாக  மறுத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது.  இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசா ரித்த சுப்ரீம் கோர்ட், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேரைத் தவிர மற்ற 19 பேரையும் விடுவித்தது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த 6-ம் தேதி தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முடிவு எடுத்து கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அமைச்சரவை கூடி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய அரசியல் சட்டம் 161-வது பிரிவின்கீழ் கவர்னருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து கவர்னர் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: ‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியதாக சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளன.  ஆனால், 7 பேர் விடுதலை குறித்து எந்த அறிக்கையும் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பவில்லை. 7 பேர் விடுதலை குறித்து அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நியாயமான முடிவு எடுக்கப்படும்’’  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான அறிக்கையை  உள்துறை அமைச்சகத்துக்கு  அனுப்பவில்லை: என கவர்னர் மாளிகை திட்டவட்டமாக  மறுத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசா ரித்த சுப்ரீம் கோர்ட், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேரைத் தவிர மற்ற 19 பேரையும் விடுவித்தது.

தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த 6-ம் தேதி தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முடிவு எடுத்து கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழக அமைச்சரவை கூடி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய அரசியல் சட்டம் 161-வது பிரிவின்கீழ் கவர்னருக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றியது.

இதையடுத்து கவர்னர் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியதாக சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளன.

 ஆனால், 7 பேர் விடுதலை குறித்து எந்த அறிக்கையும் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பவில்லை. 7 பேர் விடுதலை குறித்து அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நியாயமான முடிவு எடுக்கப்படும்’’

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மூலக்கதை