இல்-து-பிரான்சுக்குள் மான் வேட்டைக்கு அனுமதி!!

PARIS TAMIL  PARIS TAMIL
இல்துபிரான்சுக்குள் மான் வேட்டைக்கு அனுமதி!!

இல்-து-பிரான்சுக்குள் வேட்டையாடுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும் இது குறுகிய கால அனுமதியாகும். 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 16 ஆம் திகதி காலை 9 மணி முதல் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இல்-து-பிரான்சுக்குள் மான் வேட்டை நடத்தலாம். இல்-து-பிரான்சுக்குள் உத்தியோகபூர்வ அனுமதி 23,000 பேரிடம் உள்ளது. Saint-Léger-en-Yvelines இல் இவர்கள் சுதந்திரமான மான் வேட்டையில் ஈடுபடலாம். வேட்டையாளர்களின் தலைவர் François Marie இது குறித்து தெரிவிக்கும் போது, 'மிக மகிழ்ச்சியான செய்தி. சக வேட்டையாளர்கள் பலரை இனி சந்தித்து உரையாடலாம். நீண்ட நேரத்தை இதில் செலவிடலாம். 1976 ஆம் ஆண்டு எனது 16 ஆவது வயதில் எனக்கு இந்த அனுமதி அட்டை கிடைத்தது!' என மகிழ்ச்சிபொங்க தெரிவித்தார். 
 
பிறிதொரு வேட்டைக்காரர் தெரிவிக்கும்போது, ' சுதந்திரமாக இயற்கையோடு அளவளாவலாம். இன்று 10 மான்களை கட்டேன். ஆனால் ஒன்றைக்கூட சுடவில்லை. அதை சுட்டுக்குவிப்பது அல்ல எங்கள் நோக்கம்.. இது ஒரு விளையாட்டு!' என அவர் குறிப்பிட்டார். பிரான்சில் மொத்தமாக 1,100,000 பேர்களிடம் வேட்டையாட அனுமதி பத்திரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 

மூலக்கதை