செர்பியா அதிபருடன் வெங்கய்யா நாயுடு ஆலோசனை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 

செர்பியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, அந்த நாட்டு அதிபருடன் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து  ஆலோசனை நடத்தினார்.  மத்திய ஐரோப்பியாவில் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு முதலில்  செர்பியா சென்றார்.  செர்பிய அதிபர் அலெக்ஸாண்டர் வூசிக்கை அவர் சந்தித்தார். அப்போது இந்தியா, செர்பியாவுக்கு இடையிலான தாவர பாதுகாப்பு மற்றும் விமானச் சேவைகள் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.  பொருளாதாரம், பயங்கர வாதத்துக்கு எதிராக செயல்படுதல் மற்றும் கலாச்சார உறவுகள் குறித்த துறைகளை விரிவுபடுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டது.  இந்த சந்திப்பைக் கொண்டாடும் வகையில், இந்தியா மற்றும் செர்பியா தபால் துறை இணைந்து, செர்பியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானியான நிகோலா டெஸ்லா மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரது நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டன. 

செர்பியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, அந்த நாட்டு அதிபருடன் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து  ஆலோசனை நடத்தினார்.

மத்திய ஐரோப்பியாவில் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு முதலில்  செர்பியா சென்றார்.

செர்பிய அதிபர் அலெக்ஸாண்டர் வூசிக்கை அவர் சந்தித்தார். அப்போது இந்தியா, செர்பியாவுக்கு இடையிலான தாவர பாதுகாப்பு மற்றும் விமானச் சேவைகள் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பொருளாதாரம், பயங்கர வாதத்துக்கு எதிராக செயல்படுதல் மற்றும் கலாச்சார உறவுகள் குறித்த துறைகளை விரிவுபடுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டது.

இந்த சந்திப்பைக் கொண்டாடும் வகையில், இந்தியா மற்றும் செர்பியா தபால் துறை இணைந்து, செர்பியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானியான நிகோலா டெஸ்லா மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரது நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டன. 

 

மூலக்கதை