தமிழகத்தில் 2-வது கட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக 197 கூட்டுறவு சங்கங்களுக்கு அக்டோபர் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இரண்டாம் கட்டத்தில் 113 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்பட 197 சங்கங்களின் 2448 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளது. அவற்றில் 682 இடங்கள் பெண்களுக்கும், 438 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.  இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் அக்டோபர் மாதம் 6 -ஆம் தேதி தொடங்கி, 8 -ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். இறுதி வேட்பாளர் பட்டியல் 9 -ஆம் தேதி வெளியிடப்பட்டு, போட்டியிருப்பின் 11 -ஆம் தேதி அன்று வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவித்தல் அக்டோபர் 12 -ஆம் அன்றும் நடைபெற இருப்பதாக கூறியுள்ளார். நிர்வாகக் குழு உறுப்பினர்களின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் அக்டோபர் 16 -ஆம் தேதி அன்று சங்கத்தின் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல்கள் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.  இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள சங்கங்களின் பெயர் விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தரப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக 197 கூட்டுறவு சங்கங்களுக்கு அக்டோபர் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இரண்டாம் கட்டத்தில் 113 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்பட 197 சங்கங்களின் 2448 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளது. அவற்றில் 682 இடங்கள் பெண்களுக்கும், 438 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் அக்டோபர் மாதம் 6 -ஆம் தேதி தொடங்கி, 8 -ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். இறுதி வேட்பாளர் பட்டியல் 9 -ஆம் தேதி வெளியிடப்பட்டு, போட்டியிருப்பின் 11 -ஆம் தேதி அன்று வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவித்தல் அக்டோபர் 12 -ஆம் அன்றும் நடைபெற இருப்பதாக கூறியுள்ளார்.

நிர்வாகக் குழு உறுப்பினர்களின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் அக்டோபர் 16 -ஆம் தேதி அன்று சங்கத்தின் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல்கள் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள சங்கங்களின் பெயர் விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தரப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மூலக்கதை