வெளிநாட்டில் இருந்து யாழ் சென்ற குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்! வெளியாகிய முழுமையான விபரம்

PARIS TAMIL  PARIS TAMIL
வெளிநாட்டில் இருந்து யாழ் சென்ற குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்! வெளியாகிய முழுமையான விபரம்

வவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் கோயில் வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ரயில் வேனில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தனர். 

 இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
இந்த அகோர விபத்து நேற்றுக் காலை 10.30 மணியவில் நடந்துள்ளது.
 
இந்த விபத்தில் கிளிநொச்சி திருவையாற்றைச் சேர்ந்த யோகரத்தினம் இசைஞானவதி (வயது-52), காண்டீபன் ஜமுனாரஞ்சினி (வயது-32), காண்டீபன் டிசாலினி (வயது-12), சுவீடனின் வசிக்கும் கமலநாதன் சிவரஞ்சனி (வயது-30) ஆகியோரே உயிரிழந்தனர்.
 
சுவீடனைச் சேர்ந்த சிவரஞ்சியின் கணவர் கமலநாதன் (வயது-35), அவரது மகளான க.ஜெசிக்கா (வயது-7) ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
சிறுமி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். வாகனச் சாரதியான கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச் சேர்ந்த முத்தையரெட்டி கணபதிப்பிள்ளை (வயது-53) சிறு காயங்களுக்குள்ளான நிலையில் வவுனியா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
 
வேனில்  பயணித்த 8 வயதுச் சிறுவனான கா.டக்சிகன் காரில் இருந்து பாய்ந்து உயிர் தப்பியுள்ளார்.
 
கிளிநொச்சி, திருவையாற்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும், சாரதியுமாக 8 பேர் பன்றிக்கெய்தகுளத்தில் உள்ள உறவினர் வீட்டை நோக்கிச் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த மகிழுந்து தொடருந்துக் கடவையைக் கடந்தபோது இயக்கமற்று நின்றுள்ளது.
 
மகிழுந்தின் முன்னிருக்கையில் இருந்த கமலநாதனின் மடியில் டக்சிகன் இருந்துள்ளார்.. மகிழுந்து இயக்கமற்று இருந்த நிலையில், சாரதி வெளியே பாய்ந்துள்ளார். 
 
கமலநாதன் தனது மடியிலிருந்து டக்சிகனை தூக்கி எறிந்து விட்டு தானும் பாய்ந்துள்ளார். இதனால் அவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.
 
மகிழுந்தின் பின்னிருக்கையில் இருந்தவர்கள் சுதாரித்து வெளியேறுமுன்னர் தொடருந்துடன் மோதி விபத்து நிகழ்ந்தது.
 
விபத்துக்குள்ளான மகிழுந்து சுமார் 300 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.
 
மகிழுந்திலிருந்த பெண்கள் தூக்கி வீசப்பட்டனர். பின்னிருக்கையில் இருந்த 4 பெண்கள் சம்பவத்தின் போதே உயிரிழந்தனர். 14 வயதுடைய சிறுமி படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 
விபத்தில் சிக்கிய அனைவரும் நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். கடந்த ஜூலை மாதம் சுவீடனில் இருந்து வந்த இவர்கள் தமது உறவினர்களைப் பார்க்கச் சென்ற போதே விபத்தில் சிக்கினர்.
 
பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவை நிலமட்டத்திலிருந்து அதிக உயரத்தில் உள்ளது. வேனில் பயணித்தவர்கள் சந்திக்கச் சென்ற உறவுப் பெண், தொடருந்துக் கடவையை வேனில் நெருங்கிய சமயத்தில், அதற்கு எதிரே நின்று தொடருந்து வருவதாக சைகை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இருப்பினும் கணநேரத்தில் அகோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகிழுந்திலிருந்து பாய்ந்து தப்பிய சிறுவன் அதிர்சியில் உறைந்திருந்தான் என்று தெரிவிக்கப்படுகின்றது.
 
விபத்துத் தொடர்பான விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 
 
 
 
 

 

மூலக்கதை