மாணவனை அறைந்த சாரதி! - ஆதரவாக குவிந்த 30,000 கையெழுத்துக்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
மாணவனை அறைந்த சாரதி!  ஆதரவாக குவிந்த 30,000 கையெழுத்துக்கள்!!

மாணவன் ஒருவனை RATP பேரூந்து சாரதி ஒருவர் அறைந்ததாக இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் சாரதிக்கு ஆதரவாக 30,000 கையெழுத்துக்கள் குவிந்துள்ளன. 
 
Arcueil இல் கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. எவ்வித முன்னறிவித்தலும் இன்றி குறித்த மாணவன் வீதியை கடந்துள்ளான். இதை சற்றும் எதிர்பார்த்திடாட பேரூந்து சாரதி திடீரென பிரேக் அழுத்தி, ஒருவழியாக பேரூந்தை நிறுத்திவிட்டார். வீதியைக் கடந்த மாணவன், 'உன் வாயை மூடிக்கொண்டு உன் பேரூந்தை செலுத்து!' என ஆக்ரேஷமாக கத்திவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து சத்தமாக சிரித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த சாரதி, பேரூந்தை விட்டு கீழே இறங்கி, குறித்த மாணவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இந்த விவகாரம் காணொளியாக இணையத்தளம் எங்கும் பரவி வருகின்றது. மாணவர்கள் வைத்திருந்த தொலைபேசியில் படம்பிடிக்கப்பட்ட அந்த காணொளியில் சாரதி அறைவது மாத்திரமே பதிவாகியுள்ளதால், உண்மையை அறியாத பலர் மாணவனுக்கு ஆதரவாக பதிவேற்றி வருகின்றனர். 
 
சம்பவத்தை தொடர்ந்து, RATP சாரதிக்கு நன்நடத்தை தொடர்பான விளங்கங்கள் கோரப்பட்டுள்ளன. இதனால் துரிதமாக சாரதிக்கு ஆதரவாக மனு ஒன்று தயாரிக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த மனுவுக்கு, குறுகிய நேரத்தில் 30,000 பேருக்கு மேல் ஆதரவு கையெழுத்து இட்டுள்ளனர். தவிர RATP ஊழியர்கள் அனைவரையும் இதற்கு ஆதரவாக அழைத்துள்ளனர். இதனால் இந்த சம்பவம் மேலும் பரபரப்பாகியுள்ளது.

மூலக்கதை