ஆண் பாவத்துக்கு ஆளாகும் பெண்கள் அதிகரிப்பு!

PARIS TAMIL  PARIS TAMIL
ஆண் பாவத்துக்கு ஆளாகும் பெண்கள் அதிகரிப்பு!

பிரிட்டனில் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் ஆண்களுக்குப் போதுமான ஆதரவு இல்லை என்கிறது ManKind Initiative எனும் பிரிட்டிஷ் அறநிறுவனம்.

 
மனைவியால் துன்புறுத்தலுக்கு ஆளாகும் கணவன்மாரின் எண்ணிக்கை அதிகரித்துவந்தபோதும் அவர்களுக்குப் போதிய ஆதரவு இல்லை.
 
இங்கிலாந்திலும் வேல்ஸிலும் (Wales) நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், அந்தத் தகவலை வெளியிட்டது அறநிறுவனம்.
 
இங்கிலாந்தில் குடும்பத் துன்புறுத்தலுக்கு அல்லது வன்முறைக்கு ஆளாகும் ஆண்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது அந்நிறுவனம்.
 
2012இலிருந்து 2017உடன் ஒப்பிடுகையில் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக அது தெரிவித்தது.
 
குடும்ப வன்முறைக்கு ஆளாகும் நபர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஆண்கள்.
 
ஆனால் அத்தகையோருக்கு அடைக்கலம் அளிக்கும் இடங்களில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான இடங்களே ஆண்களுக்கென ஒதுக்கப்படுகின்றன.
 
ஆறில் ஓர் ஆண் தனது வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார்.
 
ஆனால், இருபதில் ஒருவர் மட்டும்தான் உதவி நாடுகிறார்.
 
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்கள் உதவி கோரி முன்வராததற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
 
அவ்வாறு பாதிக்கப்படுவோருக்கு ஆதரவு அளிக்கும் அமைப்புகள் பெரும்பாலும் பெண்களை மனத்திற்கொண்டே தங்கள் திட்டங்களை வகுப்பது அதற்கொரு காரணம் என நம்பப்படுகிறது.  
 

 

மூலக்கதை