திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆம் நாள் பிரம்மோற்சவம் - பக்தர்கள் வருகை

தினகரன்  தினகரன்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆம் நாள் பிரம்மோற்சவம்  பக்தர்கள் வருகை

ஆந்திர பிரதேஷ்: திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவதின்  இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி கிருஷ்ணர் அலங்காரத்தில் சிறிய சேஷ வாகனத்தில் அருள் பாவிக்கிறார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்றிரவு 9 மணிக்கு வாகன மண்டபத்திலிருந்து பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி மலையப்பசுவாமி நான்கு மாட வீதிகளிலும் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தார். பிரம்மோற்சவதின்  முதல் நாளான நேற்று ஏழு தலையுடன் கூடிய பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. சுவாமி வீதியுலாவைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கோலாட்டம், நடனமாடியும், பஜனைப் பாடியும் மகா விஷ்ணுவின் அவதாரங்களை விளக்கும் வேடம் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். 

மூலக்கதை