இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரோவின் ரகசிய தகவல்களை விற்றதாக விஞ்ஞானி நம்பி நாரயணன் மீது கேரள காவல்துறை வழக்குப்பதிந்து கைது செய்தது. 1994ம் ஆண்டு, நவம்பர் 30ம் தேதி. இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், சசிக்குமார் என 6 பேரை கைது செய்கிறது போலீஸ். பாதுகாப்பு ரகசியங்களை மாலத்தீவு பெண்கள் மூலம் வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. 50 நாள் சிறைவாசம். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, 1998ல் உச்ச நீதிமன்றம் அத்தனை பேரும் நிரபராதிகள் என தீர்ப்பு அளித்தது. மேலும் நம்பி நாராயணனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இழப்பீடு அதிகமாக கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். மேலும் அந்த மனுவில் பொய் வழக்கு போட்டதாகவும், தம்மை துன்புறுத்திய கேரள போலீசுக்கு தண்டனை வழங்கவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் மீது நடவடிக்கைநம்பி நாராயணனை துன்புறுத்திய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள முன்னாள் ஏடிஜிபி சிபி மேத்யூ, ஜோஷ்வா உள்ளிட்ட 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நம்பி நாராயணன் கோரிக்கை விடுத்திருந்தார்.

மூலக்கதை