பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள பிஷப்பை கைது செய்ய போலீசார் தயக்கம் : கேரள எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள பிஷப்பை கைது செய்ய போலீசார் தயக்கம் : கேரள எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

கொச்சி: பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள பிஷப் ஃபிரான்கோ முளக்கல்லை கைது செய்ய போலீசார் தயங்கி வருவதாக கேரள எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கோட்டையத்தை சேர்ந்த அந்த கன்னியாஸ்திரி புகார் அளித்து 80 நாட்கள் ஆகியும் வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் பிஷப்பை கைது செய்வது குறித்து போலீஸ் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் கூறிவிட்டது. இதனை சாதகமாக வைத்துக்கொண்டு போலீசார் வழக்கை தாமதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கன்னியாஸ்திரியின் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். அதே வேளையில் பிஷப்புக்கு காவல்துறை சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது. ஆனால் தங்களுக்கு இதுவரை எந்த சம்மனும் கிடைக்கவில்லை என்று பிஷப் தரப்பு மறுத்துள்ளது. பிஷப் ஃபிரான்கோ முளக்கல்லை உடனடியாக கைது செய்யக்கோரி கொச்சியில் 7-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இந்த பாலியல் குறித்து கத்தோலிக்க மத குருவான போப் பிரான்சிஸ்-க்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இதே போல அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி என பல நாடுகளில் இருந்தும் போப் ஆண்டவருக்கு பிஷப்புகள் மீதான பாலியல் புகார்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் மூத்த பிஷப்புகளை அழைத்து விசாரணை நடத்த போப் முடிவு செய்துள்ளார். 

மூலக்கதை