வரதட்சணைக் கொடுமை புகாரில் உடனடியாகக் கைது செய்யலாம்! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
வரதட்சணைக் கொடுமை புகாரில் உடனடியாகக் கைது செய்யலாம்! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

வரதட்சணைக் கொடுமை வழக்கில் விசாரணைக்குப் பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாகக் கைது செய்ய தடை விதித்தும் சுப்ரீம் கோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்.


வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த உடனே நடவடிக்கை எடுக்கலாம், புகார் கொடுக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.  அதே நேரம் வரதட்சணைக் கொடுமைப் புகாரில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.


வரதட்சணைக் கொடுமை செய்ததாக பெண்கள் அளிக்கும் பொய்ப் புகார்களால்,  கணவன் மற்றும் கணவன் வீட்டார் கைது செய்யப்படுவதால் அவர்களது குடும்ப வாழ்க்கையே சிதைந்து போவதாகவும் கூறி, வரதட்சணைக் கொடுமை புகாரில் உடனடியாகக் கைது செய்யக் கூடாது என்றும், கைது செய்வதற்கு முன் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது.

மூலக்கதை