சாரிடான் உள்பட்ட மருந்துகளுக்கு தடை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சாரிடான் உள்பட்ட மருந்துகளுக்கு தடை!

தலைவலியா? உடனே பக்கத்திலுள்ள கடைக்கு ஓடிப் போய் சாரிடான் வாங்கிப் போடுவது வழக்கத்தில் உள்ளது. இனி அப்படிச் செய்ய முடியாது. ஆபத்தான மருந்துகளின் பட்டியலில் சாரிடான் சேர்க்கப்பட்டு அதன் விற்பனைக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.


 உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை குழு அளித்த ஆய்வு அறிக்கையின்படி  328 மருந்துப் பொருட்களுக்கு உடனடியாகத் தடை  விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மருந்துகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் டி கோல்டு டோட்டல், கோரக்ஸ் உள்ளிட்ட சளி நிவாரணி மருந்துகள் தடையில் இருந்து தப்பித்துள்ளன.


இந்த மருந்துகள் பாதுகாப்பற்றவை என்று அறிக்கை தந்த முடிவின்படி தடை செய்யப்பட்டுள்ளன இந்தத் தடை உத்தரவின் காரணமாக ஏற்கெனவே பிரபலமாகியுள்ள  6 ஆயிரம் பிராண்டுகள் பாதிக்கப்படும்.


வலிநிவாரணியாகக் கருதப்பட்ட சாரிடான், சரும நோய் கிரீம் பாண்டெர்ம், சர்க்கரை நோய் காம்பினேஷன் மருந்து குளூகோனாம் பி.ஜி., ஆண்டிபயாடிக் லுபிடிகிளாக்ஸ், பாக்டீரியா எதிர்ப்பு மருந்தான டேக்சிங் ஏ.இசட். ஆகியவையும் அடங்கும்.

பென்சிடில் காஃப் லிங்க்டஸ், டி கோல்ட் டோட்டல், கோரெக்ஸ் இருமல் மருந்து ஆகியவை தடையிலிருந்து தப்பித்தன.

தற்போது தடைசெய்யப்பட்டுள்ள மருந்துகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டவை மட்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டவை.

மூலக்கதை