கும்மிடிப்பூண்டி அருகே லாரியுடன் 5 டன் செம்மரம் பறிமுதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கும்மிடிப்பூண்டி அருகே லாரியுடன் 5 டன் செம்மரம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒட்டியுள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செம்மரம் கடத்தப்படுவதாக நேற்றிரவு ஆரம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் எஸ்ஐ சந்திரசேகர் மற்றும் போலீசார், எளாவூர் அருகே நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து இன்று விடியற்காலை 3 மணியளவில் சென்னையை நோக்கி ஒரு லாரி வேகமாக சென்றது. அந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்தும் நிற்காமல் பறந்தது.

இதைத் தொடர்ந்து எஸ்ஐ சந்திரசேகர், காவலர் பாஸ்கர் ஆகியோர் பைக்கில் விரட்டி சென்று, சின்ன ஓபுளாபுரம் அருகே லாரியை மடக்கி பிடித்தனர்.  

அப்போது லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்ட லாரியை போலீசார் சோதித்தனர். அதில், சுமார் 5 டன் எடையுள்ள 10-க்கும் மேற்பட்ட செம்மரக் கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.   இதன் மதிப்பு ரூ. 30 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஆரம்பாக்கம் போலீசார், பிடிபட்ட செம்மரக் கட்டைகள், ஆந்திராவில் ஏற்கெனவே பறிமுதல் செய்தவையாக இருக்குமோ என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும், தப்பி ஓடிய லாரி டிரைவர் குறித்தும் விசாரிக்கின்றனர்.

.

மூலக்கதை