விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்திற்கு சோனியாகாந்தி குடும்பம் பினாமி : பாஜக புதிய குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்திற்கு சோனியாகாந்தி குடும்பம் பினாமி : பாஜக புதிய குற்றச்சாட்டு

புதுடெல்லி: விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்திற்கு சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் தான் பினாமி உரிமையாளர்கள் என்று புதிய குற்றச்சாட்டை பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. ரூ.9 ஆயிரம் கோடி கடன் ஏய்ப்பு செய்துவிட்டு லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையா அமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்துவிட்டே தப்பினார் என்பது காங்கிரஸ் தலைவர் ராகுலின் குற்றச்சாட்டு. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்திற்கு சோனியா காந்தியும், ராகுலும் சலுகை காட்டினர் என்று புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கிங்ஃபிஷர் விமான நிறுவனத்திற்கு காங்கிரஸ் அரசு சலுகை காட்டியதற்கான கடித ஆதாரங்கள் உள்ளதாக பாரதிய ஜனதாவின் தேசிய செய்தி தொடர்பாளர் பந்த்ரா கூறியுள்ளார். மல்லையாவின் விமான நிறுவனத்திற்கு சாதகமாக விதிகளை காங்கிரஸ் அரசு மாற்றியதாகவும் பின்னர் சோனியா காந்தி குடும்பம் முதல் வகுப்பில் இலவசமாக பயணம் மேற்கொண்டு வந்ததாகவும், பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் பந்த்ரா கூறியுள்ளார். அந்த நிறுவனத்திற்கு சோனியா, ராகுல் ஆகியோர் பினாமிகளாக இருப்பதாக தெரிகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் ரூ.13,500 கோடியை மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பிய வைர வியாபாரி நிரவ் மோடியை ராகுல்காந்தி டெல்லியில் ஓட்டல் ஒன்றில் சந்தித்தார் என்றும் ஷேக்தாத் பூனாவாலா புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மூலக்கதை