கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

PARIS TAMIL  PARIS TAMIL
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கோவா முதல் மந்திரியாக உள்ள மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். 3 மாதத்துக்கு பிறகு ஜுன் 14-ல் அவர் இந்தியா திரும்பினார். இதன் பின்னர், இருமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்ட மனோகர் பாரிக்கர் கடந்த வாரம் இந்தியா திரும்பினார்.

இந்நிலையில், தற்போது கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக, துணை சபாநாயகரும், பாஜக எம் எல் ஏவுமான மைக்கேல் லோபோ மருத்துவமனைக்கு சென்று மனோகர் பாரிக்கரை சந்தித்தார். அவர் நலமுடன் இருப்ப்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை