11 பேர் குழுவிடம் அரசு நிர்வாகம் ஒப்படைப்பு:ஜெர்மன்,இத்தாலி செல்கிறார் மம்தா

தினமலர்  தினமலர்
11 பேர் குழுவிடம் அரசு நிர்வாகம் ஒப்படைப்பு:ஜெர்மன்,இத்தாலி செல்கிறார் மம்தா

கோல்கட்டா: 12 நாள் பயணமாக ஜெர்மன், இத்தாலி நாடுகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மேற்குவங்க அரசு வட்டாரங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கூடுதல் தலைமை செயலாளர் நவீன் பிரகாஷ் மற்றும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் உள்பட 14 பேர் கொண்ட குழுவினருடன் விரைவில் ஜெர்மன், இத்தாலி நாடுகளுக்கு வர்த்தகரீதியாக 12 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் நாடு திரும்பும் வரை அரசை நிர்வகிக்க 11 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு ஒன்றை அமைத்து அவர்கள் வசம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். அவர்கள் தினம் தினம் அரசு நிர்வாகத்தினை செயல்படுத்திடவும், அவசர காலங்களில் முக்கிய முடிவுகள் எடுத்திடவும் அதிகாரம் வழங்கியுள்ளார்.

மூலக்கதை