இமயமலை ஏறிய அப்பா-மகள்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இமயமலை ஏறிய அப்பாமகள்!

குர்கோன் பகுதியை சேர்ந்தவர் அஜித் பஜாஜ் (53) இவரது மகள் தியா (24) இருவரும் இமயமலையின் மீது, முதன் முதலாக  ஒன்றாக ஏறிய தந்தையும் - மகளும் என்ற பெருமையைப்  பெற்றுள்ளனர்.

தியா சிறுமியாக இருந்தபோதே தந்தையுடன் சேர்ந்தும் தனியாகவும் சாதனை புரிந்தவரே. அஜித் பஜாஜூம் பல சாதனைகளைப் புரிந்து பல விருகளைப் பெற்றவர்தான்.

30 ஆண்டுகளாக விளையாட்டுத் துறை சாதனைகளுக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற அஜித் பஜாஜ், வடதுருவம், தென் துருவம் மற்றும் கிரீன்லாண்ட் ஐஸ்கேப் ஆகியவற்றில்  ஸ்கேட்டிங் செய்து போலார் ட்ரிலாஜி என்ற விருது பெற்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்கு ஒன்பது வயதாக இருந்தபோது அவரது தந்தை முதன்முதலாக  அவரை இரவு முழுவதும் மலையேறும் பயிற்சிக்காக அழைத்துச் செல்வாராம்.

இதனால் மலையேறுவது அஜித்தின் வாழ்க்கையில் துணிச்சல்மிக்க விளையாட்டாக மாறியது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அவர் முதன்முதலாக இமயமலை ஏறிய எட்மண்ட் ஹிலாரியை  சந்தித்தார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகே, இவருக்கும் இமயமலை மீது ஏற வேண்டுமென்ற  எண்ணம் தோன்றியதால் அவரது மனைவி ஷெர்லியுடன் சேர்ந்து  ஸ்நோ லெப்பர்ட் என்ற துணிச்சல் மிக்க பயண சுற்றுலா நிறுவனமொன்றை  துவக்கினார்.  அந்த  நிறுவனத்தில்  தற்போது  தியாவும் இணைந்துள்ளார்.

2011-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆவது வயதில் டிரான்ஸ் கிரீன்லாண்ட்  ஸ்கேட்டிங்' அமைப்பில் மிகக் குறைந்த வயதுடைய உறுப்பினரானார்.

2012-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் மிக உயரமான மலையாகக்  கருதப்படும் 5642 மீட்டர் உயரமுள்ள மவுண்ட் எல்ப்ரஸ் மீது ஏறி சாதனை படைத்தார்.

இமயமலை மீது ஏறிய முதல் இந்தியர்கள் என்ற பெருமையை அஜித்தும்,  அவரது மகள் தியாவும் பெற்றனர்.  அங்கு நமது தேசியக் கொடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மூலக்கதை