கடைசி பெஞ்சில் இருந்து படித்து ஐ.பி.எஸ். ஆனவர்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கடைசி பெஞ்சில் இருந்து படித்து ஐ.பி.எஸ். ஆனவர்!

கர்நாடகாவைச் சேர்ந்த 2016-ம் ஆண்டு இளம் ஐபிஎஸ் அதிகாரி மிதுன் கடைசி பெஞ்ச் மாணவராகவே இருந்திருக்கிறார்.

இதுகுறித்து மிதுன், லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் கல்லூரியில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

''இப்போது என்னைப் பார்க்கும் யாருமே, நான் ஐபிஎஸ் அதிகாரி ஆனதை நம்ப மாட்டார்கள். அப்போது நான் சாதாரண கடைசி பெஞ்ச் பையனாக இருந்தேன். பொறியியல் முடித்துவிட்டு ஐடி துறையில் வேலைக்குச் சேர்ந்தேன்.

ஆனால் வேலையில் எனக்கு நிறைவு கிடைக்கவில்லை. அதனால் வேலையை விட்டு விட நினைத்தேன். அதன்படி 3 ஆண்டுகள் பார்த்து வந்த வேலையை விட்டு விலகினேன்.

என்னுள் இருந்த போலீஸ் கனவு மீண்டும், மீண்டும் வர ஆரம்பித்தது. ஒரு போலீஸ் அதிகாரியைப் பார்க்கும போதெல்லாம் நானும் ஒரு அதிகாரியாக வேண்டும் என நினைப்பேன்.

தேர்வுக்குத் தயாராகி நான்கு முறை தோல்வியடைந்தேன். தொடர்ந்து வெற்றி ஒன்றையே லட்சியமாகக் கொண்டு முயன்றேன். முயற்சிக்குப் பிறகு யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 130-வது ரேங்க் பெற்று, ஐ.ஏ.எஸ் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் தேர்ந்தெடுத்தது எனக்கு மிகவும் விருப்பமான காவல்துறையைத் தான்.

உங்களால் இது எப்படி முடிந்தது என எல்லோரும் என்னிடம் கேள்விகள் கேட்டு திணறடித்தனர். ஆனால் போலீஸ் சீருடை எந்த அளவுக்கு என்னை வசீகரித்தது என்பதை இன்று கூட என்னால் சொல்ல முடியவில்லை.

மக்கள் துக்கத்தில் இருக்கும்போது மருத்துவரிடம் செல்வார்கள் அல்லது காவல்துறையிடம் செல்வார்கள். மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்கிறேன்'' என்கிறார் மிதுன்.

கடைசி பெஞ்ச் மாணவனும் முயன்றால் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்து வருகிறார் மிதுன்.

மூலக்கதை