ஆக்ஸ்போர்டு , மலாயா, ஜோகன்ஸ்பர்க் பல்கலைக்கழகத்திலும் தமிழிருக்கை - அமைச்சர் அறிவிப்பு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ஆக்ஸ்போர்டு , மலாயா, ஜோகன்ஸ்பர்க் பல்கலைக்கழகத்திலும் தமிழிருக்கை  அமைச்சர் அறிவிப்பு

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் ஆறு மில்லியன் டாலர் திரட்டி தமிழ் ஹார்வார்ட்-ல் ஆராய்ச்சி மாணவர்கள் கற்க எதுவாக சாத்தியப் படுத்திய நம்பிக்கை இன்று உலகம் எங்கும் இருக்கும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க தமிழர்கள் மத்தியில் , அமைப்புகள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஹார்வார்டு இருக்கையை தொடர்ந்து நியூயார்க், ஹூஸ்டன் என்று பல்வேறு தமிழ் இருக்கைகளுக்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வட அமெரிக்காவிற்கு வெளியிலும் இந்த நம்பிக்கை விரிந்துள்ளதை பார்க்க முடிகிறது .

சமீபத்தில் பாரீசில் நடைபெற்ற 3-வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.பாண்டியராஜன், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு, மலாயா, ஜோகன்ஸ்பர்க் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் இருக்காய் அமைப்பதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன என்று குறிப்பிட்டார்.

வெளிநாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் தமிழகத்திற்கு வெளியே வசிக்கும் மக்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்காய் அமைக்கவேண்டும் என்று பேசிவருவதை தொடர்ந்து பார்க்கமுடிகிறது ..

மூலக்கதை