சூரியா இது...? - 6 பேக்கில் மிரட்டல்

தினமலர்  தினமலர்
சூரியா இது...?  6 பேக்கில் மிரட்டல்

வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடி மூலம் பிரபலமான சூரி, பரோட்டா சூரி என்றே சில காலம் அழைக்கப்பட்டார். இன்றைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். நாளை(செப்., 13) சிவகார்த்திகேயன் உடன் இவர் நடித்துள்ள சீமராஜா படம் வெளிவருகிறது.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியபோதே, தான் சிக்ஸ் பேக் வைத்திருப்பதாக சொன்னார் சூரி. ஆனால் அதை வெளிக்காட்டவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயன் டுவிட்டரில், "இது நம்ப சிக்ஸ்பேக் சூரி. 8 மாத கால கடின உழைப்பு. இந்தப் போட்டோவை பகிர்வதில் மகிழ்ச்சி" என பதிவிட்டிருக்கிறார்.

சூரியின் இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர். அந்தளவுக்கு பக்காவாக தனது உடற்கட்டை சிக்ஸ் பேக்காக மாற்றியிருக்கிறார் சூரி. மேலும் சமூகவலைதளங்களில் சூரியும், சிக்ஸ்பேக் போட்டோவும் டிரண்ட்டாகி உள்ளன.

பரோட்டா சூரி இனி சிக்ஸ் பேக் சூரி...!

மூலக்கதை