இந்தியாவை விட்டு வெளியேறும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தேன்: விஜய் மல்லையா

தினகரன்  தினகரன்
இந்தியாவை விட்டு வெளியேறும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தேன்: விஜய் மல்லையா

லண்டன்: இந்தியாவை விட்டு வெளியேறும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்ததாக லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரான விஜய் மல்லையா தெரிவித்தார். பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சமடைந்தார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது.  இன்று வழக்கு விசாரணைக்கு விஜய் மல்லையா ஆஜராகினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்தியாவை விட்டு வெளியேறும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன். என் மீதான குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். எனினும், நீதிமன்றம் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். இவ்வாறு மல்லையா கூறினார்.

மூலக்கதை