சிவகார்த்திகேயனின் புகைப்படத்தால் மிரண்டு போன ரசிகர்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
சிவகார்த்திகேயனின் புகைப்படத்தால் மிரண்டு போன ரசிகர்கள்!

 நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் காமெடி நடிகர் சூரியின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.  

 
இன்றைய தமிழ் படங்களில் சூரி தலைகாட்டும் படங்களுக்கு தனிமவுசு இருக்கிறது. சந்தானம் ஹீரோ ஆனபிறகு புதிய படங்களில் அவரது ‘காமெடி’ இடத்தை சூரி நிரப்பி வருகிறார்.
 
‘ரஜினிமுருகன்’, ‘அரண்மனை–2’, ‘மருது’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ உள்பட இவர் கதாநாயர்களுடன் கைகோர்த்த படங்கள் அனைத்தும் பேசப்படும் படங்களாகவே அமைந்துள்ளன.
 
சமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் இவருடைய காமெடியும் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 
 
தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா’திரைப்படத்தில் சூரி நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது.
 

Here is our #SixPackSoori 🔥👍8 months of hard work..Extremely Happy to share tis pic here👍😊Mathssssssss #Aasaramarakaaya 👌 pic.twitter.com/SN3bRKOgR7

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 12, 2018

மூலக்கதை