சமந்தாவை சோகத்தில் தள்ளிய ராஜமவுலி

தினமலர்  தினமலர்
சமந்தாவை சோகத்தில் தள்ளிய ராஜமவுலி

ராஜமவுலி இயக்கத்தில், நானி, சுதீப், சமந்தா நடித்து வெளியான படம் நான் ஈ. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கிய படங்களில் இடம்பெறவில்லை சமந்தா. ஆனபோதும், தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரணை வைத்து அவர் இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் சமந்தா நடிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து சமந்தா அளித்துள்ள ஒரு பேட்டியில், ராஜமவுலி இயக்கத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அவர், இதுவரை என்னை அணுகவில்லை. அது மனதளவில் சோகத்தை அளித்துள்ளது.

ஆனபோதும் ராஜமவுலி படத்தில் நடிப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் வதந்திகள் தான். அதை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.

மூலக்கதை