நாகார்ஜூனா - நானியுடன் மோதும் மணிரத்னம்

தினமலர்  தினமலர்
நாகார்ஜூனா  நானியுடன் மோதும் மணிரத்னம்

மல்டி ஹீரோ கதையில் மணிரத்னம் இயக்கியுள்ள படம் செக்கச்சிவந்த வானம். அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம், செப்டம்பர் 27-ல் வெளியாகிறது.

தெலுங்கிலும் இதேநாளில் இப்படம் நவாப் என்ற பெயரில் வெளியாகிறது. அன்றைய தினம் தெலுங்கில் நாகார்ஜூனா - நானி இணைந்து நடித்துள்ள தேவதாஸ் என்ற படமும் வெளியாகிறது. இருப்பினும் தமிழைப்போலவே தெலுங்கிலும் அதிகப்படியான தியேட்டர்களில் செக்கச்சிவந்த வானம் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்.

மூலக்கதை