சமந்தாவைப்போல அனு சித்தாராவுக்கும் டபுள் ஜாக்பாட்

தினமலர்  தினமலர்
சமந்தாவைப்போல அனு சித்தாராவுக்கும் டபுள் ஜாக்பாட்

வரும் வாரம் தமிழில் (செப்-13) சீமராஜா, யு டர்ன் என இரண்டு படங்களும், மலையாளத்தில் (செப்-14) ஒரு குட்டநாடன் பிளாக், படையோட்டம் என இரண்டு படங்களும் மட்டுமே வெளியாகின்றன. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் தமிழில் இரண்டு படங்களிலும் கதாநாயகி சமந்தா தான்.. அதேபோல மலையாளத்தில் இரண்டு படங்களிலும் அனு சித்தாரா நாயகியாக நடித்துள்ளார்.

இதில் பிஜுமேனன் நடித்துள்ள படையோட்டம் படத்தில் சோலோ நாயகியாகவும், மம்முட்டி நடித்துள்ள ஒரு குட்டநாடன் பிளாக் படத்தில் ராய் லட்சுமி, பூர்ணா ஆகியோருடன் இணைந்தும் நடித்துள்ளார் அனு சித்தாரா. மலையாள சினிமாவில் கடந்த இரண்டு வருடங்களில் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக மாறியுள்ளார் அனு சித்தாரா.

மூலக்கதை