சூர்யா 37 படப்பிடிப்பில் மோகன்லால்

தினமலர்  தினமலர்
சூர்யா 37 படப்பிடிப்பில் மோகன்லால்

கே.வி.ஆனந்த் டைரக்சனில் சூர்யா மூன்றாவதாக இணைந்துள்ள (சூர்யா 37) படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது. இதற்காக கேளம்பாக்கத்தில் உள்ள எஸ்.எஸ்.என் கல்லூரியில் மிகப்பெரிய செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கிவரும் லூசிபர் படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு, சென்னைக்கு வந்து கே.வி.ஆனந்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் மோகன்லால். இந்தப்படப்பிடிப்பில் சூர்யாவும் மோகன்லாலும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

குறிப்பாக இதில் ஆர்மி ஏஜண்ட்டாக நடிக்கும் சூர்யா கம்பீர உடையுடன் நடந்து வரும் புகைப்படங்கள் டுவிட்டரில் வைரலாக பரவி வருகின்றன.

மூலக்கதை