தயார் நிலையில் சீதக்காதி

தினமலர்  தினமலர்
தயார் நிலையில் சீதக்காதி

விஜய் சேதுபதி நடித்த, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் படத்தின் ஒளிப்பதிவாளரான பிரேம் குமார், இயக்குநராக அறிமுகமாகும் படம் '96'. நட்புக்கு மரியாதை கொடுத்து அவரை இயக்குநராக்கியுள்ளார் விஜய் சேதுபதி.

த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஜனகராஜ், பகவதி பெருமாள், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 96' படத்தில் புகைப்படக் கலைஞராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

இந்தப் படத்தின் கதை விஜய் சேதுபதி - த்ரிஷாவின் பள்ளி வாழ்க்கை தொடங்கி, மூன்று கட்டங்களாக எழுதப்பட்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ள, 96 படம் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 13 அன்று ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

'சீமராஜா' 'யு டர்ன்' ஆகிய படங்கள் ரிலீஸாவதால், போதிய தியேட்டர்கள் இல்லாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும், எனவே அக்டோபர் 4-ம் தேதி '96' படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே '96' படம் அக்டோபர் 4-ம் தேதி ரிலீஸாவதில் மீண்டும் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் விஜய் சேதுபதி நடித்துள்ள 'சீதக்காதி' படத்தை அக்டோபர் 5-ம் தேதி வெளியிட படக்குழு தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை