யூ டியூப்பில் வெளியான கத்தி...

தினமலர்  தினமலர்
யூ டியூப்பில் வெளியான கத்தி...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான படம் 'கத்தி'. கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தார் விஜய். சமந்தா ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், நீல்நிதின் முகேஷ் வில்லனாக நடித்திருந்தார்.

ஆக்ஷன் படமான இந்தப் படம், விவசாயிகளின் பிரச்சனையை சொல்லும் படமாகவும் இருந்தது. இந்தப் படம் மூலம்தான் லைகா புரொடக்ஷன்ஸ் தமிழ் சினிமாவுக்குள் அடி எடுத்து வைத்தது.

'கத்தி' படம் வெளியாகி 4 வருடங்கள் கழிந்தநிலையில், தற்போது யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவிதமான கட்டணமும் இன்றி, கத்திப் படத்தை ரசிகர்கள் யூ டியூப்பில் பார்க்கலாம். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ யூ டியூப் பக்கத்தில் கத்தியை ரசிக்கலாம்.

மூலக்கதை