கிண்ணத்தை கைப்பற்றும் வேட்கையில் இலங்கை அணி!

PARIS TAMIL  PARIS TAMIL
கிண்ணத்தை கைப்பற்றும் வேட்கையில் இலங்கை அணி!

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கி வெற்றி வேட்கையுடன் புறப்பட்டது.
 
எதிர்வரும் 15 ஆம் திகதி ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறவுள்ளது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ள இத் தொடருக்கான இலங்கை அணி அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு புறப்பட்டுச் சென்றது.
 
ஒருநாள் தொடராக நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை அணியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அனுபவம் நிறைந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க இணைக்கப்பட்டுள்ளமை அணிக்கு மிகப்பெரிய பலமே.
 
அத்தோடு தடைக்குள்ளாகியிருந்த அதிரடி ஆட்டக்காரரான தனுஷ்க குணதிலக்கவும் அணிக்குத் திரும்பியுள்ளார். இதேவேளை டெஸ்ட் போட்டிகளில் சகல துறைகளிலும் பிரகாசித்து வரும் தில்ருவன் பெரேராவும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
 
இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்த லசித் மலிங்க, நான் கிராமத்திலிருந்து வந்தவன். அதனால் கடுமையான சூழல்களையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியும். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அணியில் இடம் கிடைத்துள்ளது. அதனால் என்னுடைய முழுத் திறமையையும் வெவளிப்படுத்தி அணியின் வெற்றிக்காக உழைப்பேன் என்றார். 
 

மூலக்கதை