இல்-து-பிரான்ஸ் மாகாணத்தில் மேலதிகமாக 1200 அகதிகள் தங்குமிடங்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
இல்துபிரான்ஸ் மாகாணத்தில் மேலதிகமாக 1200 அகதிகள் தங்குமிடங்கள்!!

இல்-து-பிரான்ஸ் மாகாணம் இம்மாத முடிவுக்குள், மேலதிகமாக 1,200 பேர்களுக்கான அவசரகால தங்குமிடம் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று செவ்வாய்க்கிழமை மாநில செயலாளர் இத்தகவலை தெரிவித்துள்ளார். செப்டம்பர் (2018) மாதத்துக்குள் இல்-து-பிரான்சுக்குள் அவசரகால தங்குமிடங்கள் திறக்கப்பட உள்ளது எனவும், 1,200 அகதிகள் தங்குவதற்குரிய வசதிகளோடு, அவர்களுக்கான அடிப்படை வசதியும் ஏற்படுத்தித்தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பரிசுக்குள் மீண்டும் அகதிகள் கூடியிருக்கும் முகாம்கள் உருவாகுவதை தவிர்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 9,131 அகதிகளுக்கு தங்குமிடங்கள் அமைத்துக்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒரு இடத்தில் 80 இல் இருந்து 100 பேர் வரை தங்கக்கூடிய வகையில் 1,200 பேர்களுக்கும் வெவ்வேறு தங்குமிடங்கள் இல்-து-பிரான்சின் வெவ்வேறு மாவட்டங்களில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பரிசில் மீண்டும் ஒருபோதும் அகதிகள் வரவேற்று மையம் அமைக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

மூலக்கதை