விமானத்தில் மட்டமான முந்திரி பருப்பு: மைத்ரி பால கோபம்

தினமலர்  தினமலர்
விமானத்தில் மட்டமான முந்திரி பருப்பு: மைத்ரி பால கோபம்

கொழும்பு: விமானத்தில் மட்டரகமான முந்திரி பருப்பு வழங்கியதால் இலங்கை அதிபர் ஆத்திரமடைந்தார். நேற்று ஹம்பன்டேட்டாவில் விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேசியது,கடந்த வாரம் நோபள் நாட்டிற்கு சென்றுவிட்டு இலங்கை ஏர்லைன்ஸ் மூலம் கொழும்பு திரும்பினேன். அப்போது விமானத்தில் எனக்கு வழங்கப்பட்ட முந்திரிபருப்பு சாப்பிட முடியாத படி கெட்டு போயிருந்தது. அதை நாய் கூட சாப்பிட முடியாத அளவிற்கு மட்டரகமாக இருந்தது. இதற்கு யார் பொறுப்பு என்று ஆவேசமாக பேசினார்.
இது குறித்து இலங்கை ஏர்லைன்ஸ் விமான நிர்வாகம் முந்திரி பருப்பு விநியோகம் செய்தவர்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

மூலக்கதை