சொத்து வைத்திருப்போரில் பிரான்சை முந்தும் இந்தியா

தினமலர்  தினமலர்
சொத்து வைத்திருப்போரில் பிரான்சை முந்தும் இந்தியா

புதுடில்லி 'வரும், 2022ல், பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் நாடுகளை விட, இந்தியாவில், 3,600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்போர் அதிகமாக இருப்பர்' என, சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.'நைட் பிராங்க்' என்ற நிறுவனம், உலகளவில் பணக்காரர்கள் பற்றிய ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2017ல், இந்தியாவில், 3,600 கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை, 200 ஆக இருந்தது;இது, 2022ம் ஆண்டில், 340 ஆக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த, 2017ல், பிரான்சில், 230, ரஷ்யா, பிரிட்டனில், தலா, 220 பேர், 3,600 கோடி ரூபாய்க்கு கூடுதலான சொத்து மதிப்புள்ள பணக்காரர்களாக திகழ்ந்தனர்.இந்த எண்ணிக்கை, 2022ல், பிரான்சில், 310, ரஷ்யாவில், 270, பிரிட்டனில், 260 ஆக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வலிமையான பொருளாதார வளர்ச்சி, சொத்து மதிப்பு உயர்வு ஆகியவை, உலக பணக்காரர்களின் எண்ணிக்கை உயர காரணமாக உள்ளன.இவற்றால், 2022ல், உலகம் முழுவதும், 9,570 பேர், 3,600 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்து உடையோராக இருப்பர் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த, 2017ல், 3,600 கோடி சொத்துள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை, 6,900 ஆக இருந்தது.

மூலக்கதை