மக்களவை நெறிமுறைகள் குழு தலைவராக அத்வானி மீண்டும் தேர்வு

தினகரன்  தினகரன்
மக்களவை நெறிமுறைகள் குழு தலைவராக அத்வானி மீண்டும் தேர்வு

புதுடெல்லி: மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்ைகயில் கூறப்பட்டுள்ளதாவது:நாடாளுமன்ற உறுப்பினர்களின் விதிமீறல்கள் உள்ளிட்ட நடவடிக்ைககள் குறித்து தேவைப்படும் விசாரணைகள் உள்ளிட்டவற்றை நெறிமுறைகள் குழு விசாரித்து, சபாநாயருக்கு பரிந்துரைகளை அளிக்கும். இந்தக் குழுவின் தலைவராக பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இருந்து வந்தார். இந்நிலையில், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீண்டும் அவரை இக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்.அவைக்கூட்டத்தில் பங்கேற்காத உறுப்பினர்கள் குறித்த பதிவிற்கான குழுவின் தலைவராக பி.கருணாகரன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆவணங்கள் தாக்கல் செய்யும் குழுவின் தலைவராக சந்திரகாந்த் பி கைரே மீண்டும் ேதர்வாகியுள்ளார். துணைநிலை சட்டக்குழு தலைவராக திலிப்குமார் மன்சுக்லால் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை