19 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹர்திக்

தினகரன்  தினகரன்
19 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹர்திக்

அகமதாபாத்: குஜராத்தில் பட்டேல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனாமத் அன்டோலன் சமீதி இயக்கத்தின் தலைவர் ஹர்திக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். போராட்டம் நேற்று 19வது நாளை எட்டிய நிலையில் உண்ணாவிரதத்தை அவர் முடித்துக்கொண்டார். பட்டேல் சமூகத்தை சேர்ந்த ஒருவர் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். பின்னர் பேசிய ஹர்திக், “படேல் சமூகத்தினரின் இட ஒதுக்கீடுக்கான எனது போராட்டம் தொடரும்” என்றார்.

மூலக்கதை