தளபதி தனோவா கருத்து : விமானப்படையின் செயல்திறனை மேலும் அதிகரிக்க வேண்டும்

தினகரன்  தினகரன்
தளபதி தனோவா கருத்து : விமானப்படையின் செயல்திறனை மேலும் அதிகரிக்க வேண்டும்

புதுடெல்லி: விமானப்படையின் செயல்திறனை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று அதன் தளபதி மார்ஷல் தனோவா தெரிவித்துள்ளார்.டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘இந்திய விமானப்படையின் திறன் கட்டமைப்பு 2035’ என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய விமானப்படை தளபதி மார்ஷல் பி.எஸ்.தனோவா கூறியதாவது:சர்வதேச அளவில் இந்தியா எதிர்கொள்வது போன்று வேறு எந்த நாடும் அதிகப்படியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை.எதிரிகளின் செயல்பாடுகளை எதிர்கொள்ளும் வகையில் விமானப்படையின் ஆற்றலையும் வேகத்தையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. இந்தியாவும், தன்னுடைய விமானப்படையின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில், ரபேல் போர் விமானம் மற்றும் எஸ்-400 ஏவுகணை உள்ளிட்டவற்றை வாங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. விமானப்படையின் செயல்திறனை மேலும் அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை