சீனாவில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலி

தினமலர்  தினமலர்
சீனாவில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலி

பீய்ஜிங்: சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் பலர் காயமடைந்தனர். காரில் இறங்கியவன் கத்தியால் 9 பேரை ஆத்திரத்த்தில் குத்தி கொன்றான்.
சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் நேற்று ஒரு அசுரக வேகத்தில் வந்த கார் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் பலர் படுகாயம் அடைந்தனர். உடன் காரை விட்டு இறங்கியவன் கத்தியால் கண்ணில்பட்டவர்களை சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 46 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தியதில் யாங் ஜான்யுன் (54) என்றும், பல்வேறு குற்ற வழக்குகளில் பலமுறை சிறை சென்ற குற்றவாளி என்பதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மூலக்கதை