தோல்வியில் கற்ற பாடம் இனி சிறப்பாக விளையாட உதவும்...கேப்டன் கோஹ்லி நம்பிக்கை

தினகரன்  தினகரன்
தோல்வியில் கற்ற பாடம் இனி சிறப்பாக விளையாட உதவும்...கேப்டன் கோஹ்லி நம்பிக்கை

லண்டன்: இங்கிலாந்து அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது.  இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறியதாவது: மிக முக்கியமான தருணங்களில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதே எங்களின் தோல்விக்கு காரணமாகிவிட்டது. முதலில் நல்ல தொடக்கம் அவசியம். தொடரின் இடையே தயாராவது என்பது இயலாத காரியம். முதல் டெஸ்டின் முடிவு எப்போதுமே மிக முக்கியமானது. அதில் வெற்றி பெற்றால், மன ரீதியாக உற்சாகமும் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதற்கான ஊக்கமும் கிடைக்கும். இந்த தோல்வியால், வெளிநாட்டு தொடர்களில் எங்களால் வெற்றி பெற முடியாது என நான் நினைக்கவில்லை. இந்த தோல்விகள் கற்றுத் தந்த கடினமான பாடங்கள், அடுத்த முறை வெளிநாடு சென்று விளையாடும்போது வெற்றி பெற நிச்சயம் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். அதுவே எங்களின் லட்சியமாகவும் இருக்கும். தொடரை வெல்ல வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். எதிர்காலத்தில் அதை நிறைவேற்றுவோம். தொடரின் முடிவு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றாலும், கடுமையாகப் போராடினோம் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஓவல் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டமே இதற்கு சிறந்த உதாரணம். நாங்கள் எளிதில் சரணடைந்துவிடுவோம் என்றே எல்லோரும் நினைத்தார்கள்.  அதே சமயம், இந்த தொடரில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்து வெளிநாடு சென்று விளையாடும்போது டெஸ்ட் தொடர்களையும் கைப்பற்றி சாதனை படைப்போம். இவ்வாறு கோஹ்லி கூறியுள்ளார்.

மூலக்கதை