பேரி ஜாம் தயா­ரிப்பு குன்­னுா­ரில் தீவி­ரம்

தினமலர்  தினமலர்
பேரி ஜாம் தயா­ரிப்பு குன்­னுா­ரில் தீவி­ரம்

குன்னுார்:குன்­னுா­ரில், இரண்­டாம் சீச­னுக்­காக, ௧.௫ டன் பேரி ஜாம் தயா­ரிக்­கும் பணி, துரித
கதி­யில் நடந்து வரு­கிறது.


நீல­கிரி மாவட்­டம், குன்­னுார் பகு­தி­களில் பிளம்ஸ், பேரி, பீச், ஊட்டி ஆப்­பிள், துரி­யன், மங்­குஸ்­தான் உட்­பட, பல்­வேறு வகை பழங்­கள் விளை­கின்­றன. இத­னால், மாவட்ட தோட்­டக்­க­லைத் துறை­யின் கீழ், குன்­னுார் சிம்ஸ் பூங்­கா­வில் பழப் பண்ணை அமைக்­கப்­பட்டு, அங்­குள்ள பழ­வி­யல் நிலை­யத்­தில், ஜாம் மற்­றும் பழச்­சாறு தயா­ரிக்­கப்­பட்டு வரு­கிறது.


இந்­நி­லை­யில், பழப் பண்­ணை­யில் விளைந்த 1.5டன் பேரி­யில், ஜாம் தயா­ரிக்­கும் பணி
நடந்து வரு­கிறது. இன்­னும் சில நாட்­களில், இரண்­டாம் சீசன் துவங்க உள்ள நிலை­யில், ஓரிரு நாட்­களில் ஜாம் தயா­ரிக்­கும் பணி முழு­மை­யாக முடித்து, தோட்­டக்­க­லைக்கு சொந்­த­மான விற்­பனை நிலை­யங்­க­ளுக்கு அனுப்ப, நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.ஜாம் பாட்­டில், 300 கிரா­முக்கு, 90 ரூபாய்; 500 கிரா­முக்கு, 110 ரூபாய் என, விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்­டில், 500 கிலோ­வுக்­கும் குறை­வா­கவே ஜாம் தயா­ரித்த நிலை­யில், நடப்­பாண்டு 1.5டன்
உற்­பத்தி மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை