ஜி.எஸ்.டி.,யில் புதிதாக 4 லட்சம் வணிகர்கள்

தினமலர்  தினமலர்
ஜி.எஸ்.டி.,யில் புதிதாக 4 லட்சம் வணிகர்கள்

ஜி.எஸ்.டி., நடை­முறைக்­குப் பின், தமி­ழ­கத்­தில், 4 லட்­சம் வணி­கர்­கள், புதி­தாக பதிவு செய்­துள்­ள­னர் என, வணிக வரி அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.


ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்­றும் சேவை வரி சட்­டத்­துக்கு, 2016ம் ஆண்டு, செப்., 8ம் தேதி, ஜனா­தி­பதி ஒப்­பு­தல் அளித்­தார். இதன் படி, 2017, ஜூலை 1 முதல், நாடு முழு­வ­தும், ஜி.எஸ்.டி., நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.இதன் படி, வணி­கர்­கள் பதிவு செய்ய, விற்­பனை தொகைக்­கான உச்ச வரம்பு, 20 லட்­சம் ரூபா­யாக உயர்த்­தப்­பட்­டது.


இருந்த போதி­லும், ஜி.எஸ்.டி., இணை­ய­த­ளம் மூலம், தமி­ழ­கத்­தில் பல லட்­சம் புதிய வணி­கர்­கள் பதிவு செய்­துள்­ள­னர்.இது குறித்து, வணிக வரி துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது: ஜி.எஸ்.டி., அம­லுக்கு முன், வாட், சேவை, விற்­பனை என, பல­வித வரி­கள் இருந்­தன. ஜி.எஸ்.டி.,க்கு பின், அனைத்து வரி­களும், இதற்­குள் கொண்டு வரப்­பட்­டன.


இதன் மூலம், தமி­ழ­கத்­தில் இது­வரை, 9.75 லட்­சம் வணி­கர்­கள், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்­துள்­ள­னர். இதில், 5.75 லட்­சம் வணி­கர்­கள், ஏற்­க­னவே பதிவு செய்து வரி செலுத்தி வந்­த­வர்­கள்.
நான்கு லட்­சம் வணி­கர்­கள், புதி­தாக பதிவு செய்­த­வர்­கள். இதில், மாநில மற்­றும் மத்­திய வரி வரம்­புக்­குள் உள்ள வணி­கர்­கள் அடங்­கு­வர்.


மத்­திய அரசு வரி விதிப்பு வரம்­புக்­குள், அதி­க­மான வணி­கர்­கள் சென்ற பின்­னும், தமி­ழ­கத்­துக்­கான வரி வரு­வாய் உயர்ந்­துள்­ளது.இவ்­வாறு, அவர்­கள் கூறி­னர்.


அவ­கா­சம் நீட்­டிப்பு


வாட் உள்­ளிட்ட பல்­வேறு வரி வரம்­பி­ல் இ­ருந்து, ஜி.எஸ்.டி.,க்கு மாறிய வணி­கர்­கள்,
தங்­க­ளின் கணக்கு விப­ரங்­களை மாற்­றிக் கொள்­ள­வும், தொழில்­நுட்ப ரீதி­யி­லான தவ­று­களை திருத்­திக் கொள்­ள­வும், 2019, மார்ச், 31 வரை அவ­கா­சம் நீட்­டித்து, மத்­திய வரி விதிப்பு வாரி­யம் உத்­த­ர­விட்­டுள்­ளது.


– நமது நிரு­பர் –

மூலக்கதை