நாட்டின் சில்லரை பணவீக்கம் 10 மாதங்கள் காணாத சரிவு

தினமலர்  தினமலர்
நாட்டின் சில்லரை பணவீக்கம் 10 மாதங்கள் காணாத சரிவு

புதுடில்லி:கடந்த, 10 மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, ஆகஸ்­டில், நாட்­டின் சில்­லரை பண­வீக்­கம், 3.69 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­துஉள்­ளது. இது, ஜூலை­யில், 4.17 சத­வீ­த­மாக இருந்­தது.


கடந்த ஆண்டு ஆகஸ்­டில், சில்­லரை பண­வீக்­கம், 3.28 சத­வீ­த­மாக காணப்­பட்­டது.காய்­க­றி­கள், பழங்­கள் உள்­ளிட்­ட­வற்­றின் விலை குறை­வால், சில்­லரை பண­வீக்­கம் சரி­வ­டைந்­துள்­ளது.
சில்­லரை பண­வீக்­கம், ரிசர்வ் வங்­கி­யின், 4 சத­வீத இலக்கை விட குறை­வாக உள்­ளது. அத­னால், ரிசர்வ் வங்­கி­யின் அடுத்த நிதிக் கொள்கை கூட்­டத்­தில், வங்­கி­க­ளுக்கு வழங்­கும் குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி மீண்­டும் உயர்த்தப்­பட மாட்­டாது என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.


தொழில் துறை உற்பத்தி: நாட்­டின் தொழில் துறை உற்­பத்தி, கடந்த ஜூலை மாதம், 6.6 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இது, ஜூன் மாதத்­தில், 7 சத­வீ­த­மாக இருந்­தது.இதே காலத்­தில், முக்­கிய எட்டு துறை­க­ளின் உற்­பத்தி வளர்ச்சி, 7.6 சத­வீ­தத்­தில் இருந்து, 6.6 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.
சுரங்­கத் துறை­யில், நிலக்­கரி தவிர்த்து இதர பிரி­வு­க­ளின் வளர்ச்சி குறைந்­துள்­ளது. அதே­ச­ம­யம், தயா­ரிப்பு சார்ந்த துறை­க­ளின் வளர்ச்சி நன்கு இருந்­தது.

மூலக்கதை