சக பெண் ஊழியருடன் சிற்றுண்டி உட்கொண்ட நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்...!!

PARIS TAMIL  PARIS TAMIL
சக பெண் ஊழியருடன் சிற்றுண்டி உட்கொண்ட நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்...!!

சக பெண் ஊழியருடன் சிற்றுண்டி உண்ட எகிப்திய ஹோட்டல் ஊழியரை சவுதி அரேபிய அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.
 
இருவரும் ஒன்றாக உண்ணும் காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
மெல்ல மெல்ல நவீனமடைந்து வந்தாலும் சவுதி அரேபியா இன்னும் பழமைவாதப் பாரம்பரியங்களைப் பின்பற்றி வருகிறது.
 
முகத்தை மூடிய வகையில் முக்காடு போட்ட பெண், ஆடவருக்கு உணவு ஊட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
 
சவுதி அரேபியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வேலையில் ஈடுபட்டிருந்த சந்தேகத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
ஆண்கள் இல்லாத சூழலை பெண் ஊழியர்களுக்கு ஏற்படுத்தித் தரத் தவறியதற்காக ஹோட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
 
சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டினர் அந்நாட்டின் சட்டங்களையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்

மூலக்கதை