சீமராஜாவுக்கு 8 கோடியில் அரண்மனை கட்டிய முத்துராஜ்

தினமலர்  தினமலர்
சீமராஜாவுக்கு 8 கோடியில் அரண்மனை கட்டிய முத்துராஜ்

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் நடிக்கும் சீமராஜா நாளை வெளிவருகிறது. இந்தப் படத்தின் கடைசி 20 நிமிடங்கள், சிவகார்த்திகேயன் தமிழக மன்னனாக நடித்துள்ளார். இது படத்தின் ஹெலைட்டான விஷயம் என்று தயாரிப்பு தரப்பினரே கூறிவருகிறார்கள். இந்த போர்ஷனுக்காக அரண்மனை செட் போட்டவர் ஆர்ட் டைரக்டர் முத்துராஜா. இதுபற்றி அவர் கூறியதாவது:

வரலாற்று காலத்தையும் இப்போது இருக்கிற சூழலையும் இணைக்கிற மாதிரி நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கிறோம். இப்போது இருக்கும் சூழலை குற்றாலம் அருகில் செட் போட்டு எடுத்தோம். அந்தக்கிராமம், அதில் இருக்கின்ற சின்னச் சின்ன சந்து உட்பட எல்லாமே செட் தான். மன்னர் காலத்து காட்சிகளுக்கு மகாபலிபுரம் அருகில் செட் போட்டோம். பிளாஷ்பேக் காட்சியில போர் காட்சிகளுக்காக போடப்பட்ட செட்டை, அதற்கு பிறகு இப்போதுள்ள காட்சிகளுக்காக மார்க்கெட்டாக மாற்றினோம்.

இந்த செட்களை உருவாக்க 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை பார்த்தார்கள். தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதியில் உள்ள அரண்மனைகளை நேரில் சென்று பார்த்து இதை உருவாக்கினோம். 200 ஏக்கர் நிலத்தில் இதைச் செய்தோம். இதற்காக 8 கோடி ரூபாய் வரைக்கும் செலவானது. சீமராஜாவில் என் வேலை நன்கு கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு தான். அவர் என் கலை வேலையின் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களையும் தன் கேமராவில் பதிவு செய்திருக்கிறார் என்கிறார் முத்துராஜ்.

மூலக்கதை