ஹீரோவாக நடிக்க மாட்டேன் : யோகி பாபு

தினமலர்  தினமலர்
ஹீரோவாக நடிக்க மாட்டேன் : யோகி பாபு

இப்போதெல்லாம் கேமரா இல்லாமல் கூட படம் எடுத்து விடலாம், யோகி பாபு இல்லாமல் படம் எடுக்க முடியாது என்கிற நிலை. சிறு பட்ஜெட் படங்கள் முதல் விஜய், அஜித் படங்கள் வரை யோகி பாபு இல்லாத படங்கள் இல்லை. கையில் 20 படங்களுக்கு மேல் வைத்துள்ளார். 2019 டிசம்பர் வரை அவரது கால்ஷீட் புல்.

இந்தநிலையில் டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு படங்களை இயக்கிய சாம் ஆண்டனி இயக்கும் படத்தில் யோகி பாபு தான் ஹீரோ என்ற செய்தி வெளியானது. இதனை யோகி பாபு மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

நான் எந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கவில்லை. நடிக்கவும் மாட்டேன். கடைசி வரை காமெடியன் தான். ஆண்டனியின் படத்திலும் நான் காமெடியன்தான். ஒரு வெளிநாட்டுக்காரருக்கும், நாய்க்கும் இடையிலான கதை. அந்த வெளிநாட்டுகாரர் வீட்டு வாட்ச்மேன் வேடத்தில் நடித்திருக்கிறேன். படம் முழுக்க வருவேன். என்கிறார் யோகி பாபு.

மூலக்கதை