'சாமி ஸ்கொயர்', தெலுங்கில் சாதிப்பாரா விக்ரம்?

தினமலர்  தினமலர்
சாமி ஸ்கொயர், தெலுங்கில் சாதிப்பாரா விக்ரம்?

தமிழ்த் திரையுலகத்தில் அதிரடி ஆக்சன் படமாக 2003-ம் ஆண்டு வெளிவந்து ஒரு பரபரப்பான வெற்றியை ஏற்படுத்திய படம் 'சாமி'. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 15 ஆண்டுகள் கழித்து 'சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் தயாராகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தெலுங்கில் இப்படம் சுமார் 8 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் நடித்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட தமிழ்ப் படங்களில் 'அந்நியன், பிதாமகன், இருமுகன்' ஆகிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மற்ற படங்கள் சரியாக ஓடவில்லை. இருப்பினும் தற்போது 'சாமி ஸ்கொயர்' தெலுங்கு டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பால் படத்தை வாங்கிய தயாரிப்பாளர் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

விக்ரம் தவிர தெலுங்கு ரசிகர்களுக்கு அதிகம் அறிமுகமான இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் படத்தில் இருப்பது கூடுதல் பலமாக இருப்பதால் வாங்கிய விலைக்கு மேலும் படம் நல்ல வசூலைத் தரும் என்று எதிர்பார்ப்புடன் இருக்கிறார்களாம்.

மூலக்கதை